மகிழ்ச்சி எங்கே?

ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது. அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து அதில் தங்கள் பெயரை எழுத சொன்னார். எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன், அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார்.

இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார். உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர். 5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள், அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை, அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார். அடுத்த ஒரே நிமிடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’இதுதான் வாழ்க்கை. எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம். ஆனால் அது எங்கே, எப்படி, எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை. நம் சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது. அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள், உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.

Advertisements

Money doesn’t make us rich

ஒரு பணக்கார தந்தை, அவரது மகனை வெளியூருக்கு அழைத்துச் சென்றார். ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்று அவரது மகனுக்கு காண்பிக்க நினைத்தார். எனவே,  ஒரு ஏழை குடும்பத்துடன் அவர்கள் தங்கினர்.  2 நாட்கள் அங்கு இருந்துவிட்டு, இருவரும் வீடு திரும்பினர்.
வரும் வழியில் மகனை பார்த்து தந்தை கேட்டார், ” அவங்க எவளோ ஏழையா இருக்காங்க பாத்தியா…? இந்த சுற்றுலாவிலே இருந்து நீ என்ன கத்துக்கிட்ட? ”

. மகன் சொன்னான், ” நாம ஒரு நாய் வச்சிருக்கோம்.. அவங்க 4 வச்சிருக்காங்க. நாம நீச்சல் தொட்டி வச்சிருக்கோம். அவங்க கிட்ட நதி இருக்கு. இரவுக்கு நாம லைட் வச்சிருக்கோம்… அவங்களுக்கு நட்சத்திரம் இருக்கு. சாப்பிடறதுக்கு நாம கடைல பொருள் வாங்குறோம், அவங்க அவங்களே அறுவடை செஞ்சி சாப்டுறாங்க. திருடர்கள் வராம இருக்க நாம வீடு சுத்தி சுவர் கட்டி இருக்கோம், அவங்களுக்கு அவங்க சொந்தங்கள் , நண்பர்கள் இருக்காங்க… ”

.
.
தந்தை அவனையே வெறித்துக் கொண்டிருக்க அவன் தொடர்ந்தான்,
“ரொம்ப நன்றி பா, நாம எவளோ ஏழையா இருக்கோம்னு எனக்கு காட்டி புரிய வச்சதுக்கு…”

”Money doesn’t make us rich” இது புரிந்தால் வாழ்க்கை வளப்படும்.

Believe Yourself: It is most important than other quality you can posses

நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு
இருந்தன. மெலிதாய் காற்று வீசிக்கொண்டு
இருந்தது..!!
காற்றை கண்டதும்…
‘அமைதி‘ என்ற முதல் மெழுகுவர்த்தி ‘
ஐயோ காற்று வீசுகின்றது, நான் அணைந்து
விடுவேன் என்று பலவீனமாக சொன்னது.
காற்று பட்டதும் அணைந்துவிட்டது.
‘அன்பு ‘ என்ற அடுத்த மெழுகுவர்த்தியும்
காற்றை எதிர்க்க முடியாது’ என்று அணைந்துவிட்டது.
‘அறிவு‘ என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும்
காற்றை எதிர்க்க முடியாமல் அணைந்தது.
நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று
வீசிய சிலநொடிகள் போராடி ஜெயித்துவிட்டது.
அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான்.
‘அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே’
என்று கவலையுடன் சொன்னான்.
அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி
சொன்னது, வருத்தப்படாதே நான் இருக்கின்றேன்.
என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துகொள்’
என்றது.
சிறுவன் உடனே..
நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து
” உன்பெயர் என்ன.?”என்று கேட்டான்..
‘நம்பிக்கை’ என்றது அந்த மெழுகுவர்த்தி.
நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்
இழக்கக் கூடாது…!!

Sanyasi’s anger and Farmer’s hope

அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். யாருமே ஊரில் அவரைக் கண்டுகொள்ளவில்லை.
முனிவர் அல்லவா? கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு “இன்னும் 50வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது .வானம் பொய்த்துவிடும்”.
இந்த சாபம் பற்றி கேள்விப் பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர். சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர்.
வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர்.
மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான் ( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது நம்பிக்கை). இன்னும் 50 வருடங்கள்மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான்.
அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது, ஒரே ஒரு உழவன் மட்டும் கலப்பையைக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர்.
மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு. அவனிடம் கேட்டே விட்டனர்.
நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா என்று, அதற்கு அவனின் பதில்தான் நம்பிக்கையின் உச்சம்  “50 வருடங்கள் மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும் . உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து உழுவது எப்பிடி என்றே எனக்கு மறந்து போயிருக்கும். அதனால்தான் தினமும் ஒருமுறை உழுது கொண்டு இருக்கிறேன்” என்றான்.
இது வானத்தில் இருந்த பரந்தாமனுக்கு கேட்டது. அவரும் யோசிக்க ஆரம்பித்தார். “50 வருசம் சங்கு ஊதமால் இருந்தால் எப்பிடி ஊதுவது என்று மறந்து போயிருமே” என்றே நினைத்து சங்கை எடுத்து ஊதிப் பார்க்க ஆரம்பித்தார். இடி இடித்தது… மழை பெய்ய ஆரம்பித்தது… நம்பிக்கை ஜெயித்து விட்டது.
“தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்”. வெற்றி நிச்சயம்!

Failed in education; success in career

இனி நீ படிக்க லாயக்கே இல்லை! என்று உங்களை யாராவது சொல்கிறார்களா? – இதைக் கொஞ்ச படிங்க‌.

வாழ்வில் முன்னேற கடின உழைப்பு மட்டுமின்றி சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி
எடுக்கும் முடிவுகளும் முக்கியம் என்பதை உணர்த்தும் சம்பவம்.
ஒரு மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஃபெயில், தலைமை ஆசிரியருக்குக் கோபம் வந்து விட்டது. “இப்பள்ளியில் பத்துவருஷமாப் படிச்சிருக்கே; ஒரு பாடத்துல கூட பாஸாகலை.
வகுப்புல பாடம் நடத்தும்போது நீ என்ன காதுல பஞ்சு வெச்சு அடைச்சு கிட்டிருந்தியான்னு கோபாமாக திட்டினார்.
அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான். “இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று டி.ஸி. கொடுத்து அனுப்பிவிட்டார்.
அந்தப்ப பையன் தெருவில் இறங்கி நடந்தான். “உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே? என்ற அந்த வார்த் தை காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. உடனே தன் காதுகள் இரண்டையும் நன்றாக முடினான்.
அமைதியான அந்த உலகம் அவனுக்குவித்தியாசமாக தெரிந்தது. ஒரு புதிய சிந்தனை உருவானது. தலைமையா சிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான். ஒரு புது சாதனத்தை வடிவமைத்தான். அதன் பெயர் இயர் மஃப்
பரீட்சைக்கு படிக்கிறவர்கள் தொந்தரவின்றிப் படிக்க வாங்கினார்கள். இரைச்சலான இடங்களில் வேலை செய்பவர்கள் வாங்கினார்கள். ஓரளவுக்கு வியாபார ம் நடந்தது.
அச்சமயம் முதல் உலகப்போர் ஆரம்பமானது. பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர்மஃப் கட்டாயம் அணிய வேணடும் என அதிகாரி உத்தரவிட்டார். போர்வீரர்களுக்கு வசதியாக ஹெல்மட்டில் அமைத்து கொடுத்தான். கோடீஸ்வரனானார்.
அவர்தான் செஸ்டர் கீரின்வுட்.
சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை சரியானமுறையில் பயன்படுத்தியதால் முன்னேறினார்.
ஆகவே உங்களை யாராவது இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று சொன்னால், ஆமா நான் படிக்க லாயக்கில்லை ஆனால் சாதிக்க‍ லாயக்கு, என்று சொல்லிவிட்டு, சமயோசிதமாக செயல் பட்டு வாழ்க்கையில் முன்னேறுங்கள்.