நீ தான் கடவுள்

உணவு என்பது மருந்து

ஆடை என்பது மானம்

பணம் என்பது தேவை

ஆங்கிலம் என்பது மொழி

தமிழ் என்பது உயிர்.

அம்மா என்பது பாசம்

அப்பா என்பது ஆசான்

ஆனந்தம் என்பது ஆயுள்

சினம் என்பது நோய்

துன்பம் என்பது பரீட்சை

தோல்வி என்பது பாடம்

வெற்றி என்பது தற்காலிகம்

நட்பு என்பது இளமை

குடும்பம் என்பது பற்று

கர்மா என்பது தொடரும்

எண்ணம் என்பது வாழ்க்கை

உலகம் என்பது மாயை

நான் என்பது அறியாமை

ஆன்மா என்பதே நிஜம்

இதை உணர்ந்து கொண்டால்

நீ தான் கடவுள்!

எதிரியை விட ஆபத்தானவர்கள் யார்?

ஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார்.

அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந்த மலைப்பாம்பு உணவு உண்பதை நிறுத்தி விட்டதையும் அத்துடன் புதிய வழக்கமாக இரவினில் அந்த பெண் தூங்கும்போது அவள் மீது படுத்து கொள்வதையும் கவனித்தாள்.

அவருக்கு மிகுந்த கவலை வந்துவிட்டது.
என்ன என்னவோ செய்து பார்த்தும் அந்த பாம்பு எதையும் உண்ணவில்லை.

இறுதியாக அந்த மலைப்பாம்பை ஒரு கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று பரிசோதித்தார். பரிசோதித்து முடித்தவுடன் அந்த மருத்துவர் கவலையுடன் அந்த பெண்ணிடம் ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார்.

“உங்க பாம்பு உங்களை கொன்று விழுங்க தயாராகிக்கொண்டிருக்கிறது.
உங்களுடைய நீள அகலத்தை இரவுகளில் நீங்கள் தூங்கும்போது அளக்கிறது. அது உங்களை அதனுடைய இரையாக முடிவு செய்த மறுகணமே உங்களை விழுங்க வசதியாக தன்னுடைய வயிற்றை காலி செய்துக்கொண்டிருக்கிறது. உடனடியாக அதனை கொல்லுங்கள்….!” என்றார்

#நீதி: உங்களை சுற்றியுள்ள அனைவரும், உங்களை அரவணைக்கும் அனைவரும் நல்லவர்கள் என கருதுவது ஆபத்து.
உங்களை விழுங்கி ஏப்பம் விட தயாராக இருக்கும் அந்த மலைப்பாம்பை போன்ற நண்பர்களை இனம்கண்டு களைந்துவிடுங்கள்.

எதிரியை விட ஆபத்தானவர்கள் அவர்கள்….!

மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்…

உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருவதுடன், அது வரிசைப்படுத்தியதையும் உங்களுக்கு என் மொழியில் தருகிறேன்.

உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்
Top 10 Oldest Languages in the World
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது.

10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin)

ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது.
அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.

9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian)

இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.

8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian)

கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew)

இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.

6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic)

அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.

5 வது இடத்தில் சீன மொழி (Chinese)

சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.

4 வது இடத்தில் கிரீக் (Greek)

கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.
3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian)

ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit)

இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது.
ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)

50000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.
http://www.worldblaze.in/top-10-oldest-languages-in-the-world/

இந்த மெய்யான தகவலை பகிரவும்.

தமிழன் என்று சொல்ல டா தலை நிமிர்ந்து நில்லடா

தமிழன் என்று சொல்ல மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

அடக்க முடியாத கோபம்…

ஜென் குரு பங்கேயின் மாணவன் ஒருமுறை அவரிடம் வந்து “மாஸ்டர், எனக்கு அடக்க முடியாத கோபம் வருகிறது. இதை எப்படி குணப்படுத்துவது?” என்று கேட்டான். அப்படியெனில் “ஏதோ ஒன்று உன்னை பயங்கரமாக ஆட்டி வைக்கிறது. சரி, இப்பொழுது அந்த அடக்க முடியாத கோபத்தை காட்டு” என்று சொன்னார்.

அதற்கு மாணவன் “அதை இப்பொழுதெல்லாம் காட்ட முடியாது” என்றான்.
“வேறு எப்பொழுது காட்ட முடியும்?” என்று குருவும் கேட்டார். அதற்கு அவன் “அது எதிர்பாராத நேரத்தில் தான் வருகிறது” என்றான்.

அப்போது குரு “அப்படியென்றால் அது உன்னுடைய சொந்த இயல்பாக இருக்க முடியாது. அவ்வாறு உனக்கு சொந்தமானதாக இருந்தால், நீ எந்த நேரத்திலும் எனக்கு அதை காண்பித்திருப்பாய்.

நீ பிறக்கும் போது அதை கொண்டு வரவில்லை, உன் பெற்றோரும் உனக்கு அதை கொடுக்கவில்லை. அப்படியிருக்க உனக்கு சொந்தமில்லாத ஒன்றை ஏன் உன்னுள் வைத்துள்ளாய் என்று யோசித்து பார். பின் உனக்கே புரியும்” என்று சொன்னார்

தோற்று போ

அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..

அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..

துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..

பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..

சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..

நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..

ஆகவே தோற்று போ,

தோற்று போனால் வெற்றி கிடைக்கும்

அன்புடன் வாழுங்கள்.மற்றவரைமற்றும் அன்புடன் வாழ வழி வகுப்போம்..நன்றி..

கண்ணாடி சொல்லும் பாடம்…

🖼கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”
நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?
அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்- கணவரிடம்/ மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🖼கண்ணாடி சொல்லும் இரண்டாவது பாடம்!”
கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும்.அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🖼கண்ணாடி சொல்லும் மூன்றாவது பாடம்!”
ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா? இல்லையே…!

அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் உங்கள் மனதை அலங்கரிக்கட்டும்…

கடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும்…

ஒரு சேல்ஸ் செமினாரில் பயிற்சியாளர் கூட்டத்தினை பார்த்து,

“நாட்டில் மிகவும் பணக்கார கோவில் எது…?” ன்னு கேட்டார்….

எல்லாரும் ஒரே குரலில் திருப்பதி வெங்கடாசலபதி னு சொன்னாங்க….

“ஏன்…. பதில் தெரியுமா”…ன்னு கேட்டார் பயிற்சியாளர்…..

ஆளாளுக்கு ஒரு பதில் சொன்னாங்க…..

அவுங்க பதில்ல திருப்தி அடையாத பயிற்சியாளர் சொன்னார்…..
“எத்தனையோ இடங்களில் பெருமாள் கோவில் உள்ளது…. ஆனால், திருப்பதில மட்டும்தான் சாமி இரவு 12 மணிவரை பக்தர்களை பார்த்து ஆசீர்வதிக்கிறார்….. மீண்டும் காலைல 3 மணிக்கு எழுந்து தரிசனம் குடுக்கறார்…. பகலில் ஓய்வு கூட எடுப்பதில்லை…மற்ற, கோவில்களில் இரவு 9 மணிக்கு நடை சாத்துகிறார்கள்… பகலில் ஓய்வு உண்டு…. ஆகையால் கடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும் என்பது கடவுளுக்கே பொருத்தும்போது நமக்கு பொருந்தாதா….. என்று கேட்டார்….